• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவை விமான நிலையத்தில் பிடிபட்ட அரியவகை விலங்கினங்கள்..,சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!

BySeenu

Nov 11, 2023

கோவை விமான நிலையத்தில், கடந்த 6ம் தேதி சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று கோவை வந்துள்ளது. அப்போது பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போது 3 பயணிகள் பெட்டியை அப்படியே வைத்து விட்டு சென்றுள்ளனர்.
ஒருநாள் முழுவதும் 3 பெட்டிகளை அங்கேயே இருந்ததால் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகமடைந்து அந்த பெட்டிகளை யார் எடுத்து வந்தது என கண் காணிப்பு காமிரா மூலம் சோதனை செய்தனர். அப்போது 3 நபர்கள் பெட்டி எடுத்து வந்து வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.
பெட்டியை எடுத்து வந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் 3 பேரும் சிங்கப்பூரில் இருந்து வந்தவர்கள் என தெரிய வர அவர்களின் அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விமான நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர் .அதனை தொடர்ந்து டொமினிக்,ராமசாமி என்ற இருவர் மட்டுமே விசாரணைக்கு வந்துள்ளனர்.
பின்னர் விசாரணை மேற்கொண்ட போது பெட்டியை சோதனை செய்ததில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு உயிரினங்களான ஆமை குஞ்சுகள், சிலந்தி வகைகள், அரியவகை பாம்புகள் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டு, அங்கு வந்த அதிகாரிகள் அவற்றை கைப்பற்றினர்.  கைப்பற்றப்பட்டவை அரியவகை வெளிநாட்டு விலங்குகள் என்பதால் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. 
மேலும் விசாரணைக்கு வராத நபர் குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.