• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடியில் நவ.18ல் உள்ளூர் விடுமுறை..!

Byவிஷா

Nov 8, 2023

வருகிற நவம்பர் 18ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டிவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா வரும் 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து, கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த விழாவிற்கு அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இவ்விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 18ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கந்த சஷ்டியை முன்னிட்டு ஐப்பசி மாத அமாவாசைகளில் பிறகு வரும் ஆறாம் நாள் (சஷ்டி தினம்) அதாவது, தீபாவளி அடுத்த நாள் (13ஆம் தேதி) தொடங்குகிறது. சஷ்டி விழா தொடங்கியதும், 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் இந்த கந்த சஷ்டி திருவிழா நாட்களில் விரதம் இருந்து வந்தால், நினைத்து காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.