• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Nov 7, 2023

சிந்தனைத்துளிகள்

துஷ்டனுக்கு அறிவுரை கூறக்கூடாது.

ஒரு காட்டில் ஒரு நாள் மழை பெய்து கொண்டிருந்த போது, அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.
அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழையில் நனையாமல் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.
மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும், பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது. மனம் பொறுக்காமல், குரங்காரே…என்னைப் பாரும் வெய்யில், மழையிலிருந்து என்னையும், என் குஞ்சுகளையும் காப்பாற்றிக் கொள்ள கூடு கட்டியிருக்கிறேன். அதனால்தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே! கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சென்னது. இதனைக் கேட்ட குரங்குகளுக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உன்னை விட நான் எவ்வளவு வலுவானவன்? எனக்கு நீ புத்தி சொல்கிறாயா,
இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார் என மரத்தில் விடு விடு என ஏறி பறவையின் கூட்டைப் பிய்த்து எறிந்தது. பறவைக்கு அப்போதுதான் புரிந்தது.
அறிவுரைகளைக்கூட அதைக் கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்ல வேண்டும் என்று.
துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும், தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது.
நாமும் ஒருவருக்கு அறிவுரை வழங்கும் முன் அவது அதனை ஏற்று நடப்பாரா என்று புரிந்து கொண்ட பின்னரே அறிவுரை வழங்க வேண்டும்.