• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேசிய சிறுபான்மை மக்கள் இயக்க கட்சி.., மாநில ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டின் சூசைராஜ் பேட்டி…

ByKalamegam Viswanathan

Nov 5, 2023

மதுரையில் தேசிய சிறுபான்மை மக்கள் இயக்க கட்சி, அனைத்து கிறிஸ்தவ மக்கள் களம் மற்றும் ஆதி திராவிட கிறிஸ்தவர் கூட்டமைப்பு சார்பில் சமூக சமய நல்லிணக்க விழா மதுரை கூடல்நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், தேசிய சிறுபான்மை மக்கள் இயக்க கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டின் சூசைராஜ் தலைமை தாங்கி சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்கள் ஆண்கள் மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் வழங்கினார். விழாவில் ,
தேசிய சிறுபான்மை மக்கள் இயக்க கட்சி மாவட்டச்செயலாளர் அன்புச்செல்வன், ஏதேன் மறை மாவட்ட நிர்வாகி கிறிஸ்டி ஜோதி கிருபா பாய், ஆங்கிலிகன் சபை பிஷப் ராஜாஜி சாமுவேல், மக்கள் மேம்பாட்டு கழக பொருளாளர் நளினி, சிறு வியாபாரிகள் சங்கத்தலைவர் ஆனந்த், விசிக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அருள் ஜோசப், திமுக மாநில விவசாய தொழிலாளர் அணியின் இணைச் செயலாளர் பாக்கியநாதன், தமிழக கிறிஸ்துவ திருச்சபைகள் கூட்டமைப்பின் தலைவர் அலெக்ஸாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், அவர் செய்தியாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டின் சூசைராஜ் கூறும் போது, என்னோட நோக்கம் சமூக சமய நல்லெணக்க வளர்க்க தேசிய சிறுபான்மை மக்கள் கட்சியுடன் முக்கியமானது கோட்பாடு இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கின்ற எந்த அரசியல் கட்சி இருந்தாலும் இப்பொழுது ஆரம்ப காலம் தொட்டு சிறுபான்மை நலன் இருக்க திராவிட முன்னேற்ற கழகம் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றார்கள் . வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி முடிவு எடுக்கின்ற இறுதி கட்ட முடிவு என்ற தேசிய, தலைவர் அறிவிப்பார் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் நாங்கள் ஓங்கி குரல் கொடுத்து வருகிறோம்.