• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அடையாளம் தெரியாத வாகனம் மோதி, ஓய்வு பெற்ற வருமான வரி அதிகாரி படுகாயம்…

ByKalamegam Viswanathan

Nov 4, 2023

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பிரதான சந்திப்பு. இதில் வெங்கட் ரங்கன் வயது 70 ஓய்வு பெற்ற வருமான வரி அதிகாரி, மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் பைபாஸ் சாலை கருப்புசாமி கோவில் எதிரே உள்ள தனியார் ஹோட்டலில் உணவு வாங்கிக் கொண்டு இவரது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். நேரு நகர் பிரதான சாலையில் வலது புறம் திரும்புவதற்காக வாகனத்தை திருப்பி உள்ளார். அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது நிலைகுலைந்த வெங்கட்ர ரங்கன் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அக்கம் பக்கம் 108 அவசர கால ஊர்தி மூலமாக சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்