• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நியோமேக்ஸ் மோசடி வழக்கு, திமுக நகர செயலாளர் செல்வக்குமார், நீதிமன்றத்தில் சரண்டைந்தார்…

ByM.Bala murugan

Nov 2, 2023

நியோ மேக்ஸ் என்ற நிறுவனம் தங்களிடம் முதலிடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களான வீரசக்தி, கமலக் கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் 11 பேர் கைது செய்யப்பட்டு 92 பேர் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது., மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன.

திமுக தெற்கு நகர செயலாளர் செல்வக்குமார்

இந்நிலையில் இந்த நியோமேக்ஸ் மோசடி தொடர்பாக இன்று கம்பத்தைச் சேர்ந்த திமுக தெற்கு நகர செயலாளர் செல்வக்குமார் என்பவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி மகாராஜன் முன்னிலையில் சரண்டைந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாராஜன், திமுக நகர செயலாளர் செல்வக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.