• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தனக்குரிய செல்வாக்கினை பிரதமர் நிலைநாட்ட வேண்டும் – ஓ.பி.எஸ் பேட்டி

ByKalamegam Viswanathan

Oct 23, 2023

பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது,

வான்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மீண்டும் ஒரு வரலாற்றைப் படைத்திருக்கிறது அனைத்து இந்திய மக்களும் அவர்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

வடகிழக்கு பருவமழை குறித்த கேள்விக்கு,

வடகிழக்கு பருவமழை இன்றுதான் துவங்கியுள்ளது. மழை பாதிப்பு வந்தால் அதற்குரிய நிவாரணங்களை தமிழக அரசு உரிய முறையில் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இஸ்ரேல் விவகாரத்தில் மத்திய மாநில அரசு செயல்பாடு குறித்த கேள்விக்கு,

இரு நாடுகளுக்குள் உள்ள பகைமையை தீர்த்துக் கொள்வதற்கு போர் என்கிற நிலை மாற வேண்டும். இரு தரப்பினரும் பேசுவதற்கு ஐநா சபை மற்றும் இந்திய பிரதமர் உலக நாடுகள் நன்மதிப்பை பெற்று இருக்கிறார் அவர் முயற்சி எடுத்து இரு நாடுகளும் சமரச ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு தனக்குரிய செல்வாக்கினை பிரதமர் நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வேடர் புளியங்குளம் அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் தவசி என்பவரின் மகள் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் மணமக்கள் இருவரும்
(சிவக்குமார் தேவி சத்யா ) மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்சை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மதுரை விமான இணையத்தில் தொண்டர்கள் ஓபிஎஸ்ஐ வரவேற்ற போது ஒரு தொண்டர் அம்மா விதைத்த உண்மையான கதிர் ஐயா தான், இடையில் கலைந்த கதிர் தான் எடப்பாடி அது அழிந்து போகும் என்று முழக்கமிட்டார்.