• Fri. May 3rd, 2024

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்..!

Byவிஷா

Oct 23, 2023

ஆயுதபூஜையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விழா காலங்களில் சிறப்புசந்தை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மலர் அங்காடி வளாகத்தில் ஆயுத பூஜையையொட்டி சிறப்பு சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் பொறி, கடலை, வாழைப்பழம். வாழைக்கன்று, வாழை இலை, தேங்காய், கரும்பு போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை உள்ளிட்ட பூஜையில் வைப்பதற்கு தேவையான அனைத்து பழங்களும் விற்கப்படுகிறது. சாமி படங்களுக்கு அணிவிப்பதற்கான சாமந்தி உள்ளிட்ட அனைத்து வகையான பூக்களும் விற்பனை செய்யப்படுகின்றன. மல்லி ஒரு கிலோ 900 ரூபாய்க்கும்,சாமந்தி 180 முதல் 200 ஒரு கிலோ ரூபாய்,முல்லை பூ ஒரு கிலோ 600 ரூபாய், சாதி மல்லி 500 ரூபாய்க்கும்,விற்கப்படுகிறது. விலை சற்று அதிகம் இருந்தாலும் பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *