• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சென்னையில் ஸ்டீல் கம்பெனிக்குச் சொந்தமான இடங்களில்.., வருமான வரித்துறையினர் சோதனை..!

Byவிஷா

Oct 18, 2023

சென்னையில் ஸ்டீல் கம்பெனிக்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரம் விளக்கு, எழும்பூர், மண்ணடி, தாம்பரம் குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரிஏய்ப்பு தொடர்பாக அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் மருந்து நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மருந்து பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அதிகாரிகளின் சோதனை மற்றும் விசாரணை நிறைவுபெற்ற பின்பு தான் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்த தகவல்கள் தெரியவரும்.