• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சென்னையில் ஒரே நாளில் 200 காரை டெலிவரி செய்த விஷ்ணு கார்ஸ்

Byஜெ.துரை

Oct 16, 2023

சென்னை காட்டு பாக்கம் பகுதியில் அமைந்துள்ள விஷ்ணு கார்ஸ் ஷோரூமில் ஒரே நாளில் நியூ பாண்டியன் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு 200 கார்களை டெலிவரி செய்து சாதனை படைத்துள்ளது.

சென்னையில் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு மாருதி டீலரிடம் இருந்து டெலிவரி செய்யப்பட்ட அதிகபட்ச டெலிவரி இதுவாகும் இதில் டூர் எஸ் (டிசைர்) மற்றும் டூர் எம் (எர்டிகா) உள்ளிட்ட கார்களும் டெலிவரி செய்யப்பட்டன.

நியூ பாண்டியன் டிராவல்ஸ் 75க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாகனங்களை இயக்கி வரும் தென்னிந்தியாவின் முன்னணி டிராவல்ஸ் நிறுவனமாக உள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்நிறுவனத்தில் 4500க்கும் மேற்பட்ட கார்களும், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நியூ பாண்டியன் டிராவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நடராஜன் கூறுகையில்,எங்கள் நிறுவனம் டிரவால்ஸ் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஆகும். தற்போது சிஎன்ஜி வாகனங்களை அறிமுகம் செய்வதன் மூலம் சுற்றுச்சூழலை பாதிக்காத நிலையான எதிர்காலத்திற்கான எங்கள் பங்களிப்பை வழங்கி போக்குவரத்து துறையில் சிறப்பான சேவை செய்ய இருக்கிறோம்.

இந்த முன்முயற்சியானது கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கும் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதற்கும் மற்றும் நிலையான இயக்கம் தீர்வுகளை மேம்படுத்துவதற்கும் எங்களின் முயற்சிகளில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது என்று கூறினார்

இந்நிகழ்ச்சியில் மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான பிராந்திய மேலாளர் பரத் சம்பத் விஷ்ணு கார்ஸ் டீலர்கள் தலைவர் வெங்கட் ராவ், நியூ பாண்டியன் டிராவல்ஸ் நிறுவனர் மற்றும் இயக்குனர் சங்கர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.