• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பிரபாஸ் பிறந்தநாள் ஸ்பெஷல் – ராதே ஷயாம் படத்தின் டீஸர் வெளியீடு…

Byமதி

Oct 23, 2021

பிரபாஸ் இன்று தனது 42ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். வருஷம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர், பல்வேறு தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவர் நடித்த பாகுபலி உலகளவில் இவருக்கு புகழைப் பெற்றுத்தந்தது.

இந்த நிலையில் தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் “ராதே ஷயாம்”. இவருடன் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் இந்த படம், 1970-களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில், படக்குழு பிரபாஸின் பிறந்தநாளை ஒட்டி பிரபாஸின் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் டீஸர் ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளியிட்ட சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்கள் இதை பார்த்து ரசித்து உள்ளனர்.