• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விக்கிரமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடத்துடன் மறியல்…

ByKalamegam Viswanathan

Oct 3, 2023

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழப்பட்டி கிராமத்தில் குடிநீர் சரிவர கிடைக்காததால் இக்கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி பாண்டியிடம் முறையிட்டனர். இதன் பேரில் ஊராட்சி நிர்வாகம் அருகில் உள்ள கன்மாயில் போர்வெல் போட்டு குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்தனர். இதில் தனிநபர் ஒருவர் குடிநீர் எடுக்கக் கூடாது என்று தகராறு செய்ததாகவும், இதனால் இக்கிராமத்திற்கு குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து காலை கீழப்பட்டி அரசு பள்ளி முன்பாக மெயின் ரோட்டில் காலி குளத்துடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விக்கிரமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் சிறப்பு சார்பு ஆய்வாளர் காமாட்சி உள்பட போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேசி விரைவில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர். தற்போது வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் போர்வெலில் குடிநீர் எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கக்கூடிய தருவாயில் ஊராட்சி நிர்வாகம் கண்மாயில் போர்வெல் அமைத்துக் கொடுத்து குடிநீர் எடுக்கக்கூடிய நிலையில் இருக்கக்கூடிய தருவாயில் அந்த குடிநீரை எடுக்க விடாமல் தனிப்பட்ட நபர் தடுத்து இருப்பதால், இக்கிராமத்திற்கு குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து இக்கிராமத்திற்கு குடிநீர் தங்குதடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.