• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சித்தா திரை விமர்சனம்!!

Byஜெ.துரை

Sep 26, 2023

S. U.அருண்குமார் இயக்கத்தில் எடாக்கி என்டர்டெயின்மென்ட் சித்தார்த் தயாரித்து அவரே நடித்து வெளிவந்த திரைப்படம்”சித்தா”

இத்திரைப்படத்தில் நிமிஷா,அஞ்சலி, சஹஷ்ரா ஶ்ரீ, எஸ்.ஆபியா தஸ்னீம்
பாலாஜி உட்பட மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

பழனியில் துப்புரவு வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு சூப்பர்வைசராக கதாநாயகன் சித்தார்த் வேலை செய்து வருகிறார்.

அண்ணி, அண்ணன் குழந்தையோடு வாழ்ந்து வருகிறார்.
அண்ணன் பெண் குழந்தையை பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.

சித்தார்த் பல வருடங்கள் கழித்து நாயகியை எதிர்பாராத விதமாக பேருந்து நிலையத்தில் சந்திக்கிறார் குழந்தையை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்கின்ற நேரம் தவறியதால் கதாநாயகி உடன் பேசாமல் அங்கிருந்து அவசரமாக கிளம்பி விடுகிறார்.

பின்னர் கதாநாயகியை தேடி அலைகிறார் ஆனால் தான் சூப்பர்வைசராக பணிபுரியும் இடத்திலே துப்புரவு தொழிலாளியாக புதிதாக வேலைக்கு சேர்ந்து விடுகிறார் கதாநாயகி.

அப்பொழுது அவர்கள் பழைய காதல் மீண்டும் தொடர்கிறது.

இன்னொரு பக்கம் ஒரு நாள் தன் நண்பனின் அக்கா மகள் ஒரு மாதிரியாக இருக்க சித்தார்த் விசாரிக்க பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டில் விட்டுட்டு வருகிறேன்.

பள்ளியில் இரு என்று அண்ணன் மகளிடம் சொல்லிவிட்டு செல்கிறார்.

சித்தார்த் தவறாக நடந்துவிட்டதாக அவர் மீது பழி விழுகிறது.

இந்த பிரச்சனையில் இருந்து சித்தார்த் வெளியே வந்தாரா,இல்லையா என்பது தான் படத்தின் கதை.

படத்தில் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்கேற்றார் போல் சிறப்பாக நடித்துள்ளனர்

விஷால் சந்திரசேகரின் இசை படத்திற்கு மிக பெரிய பலம்

யுகபாரதி, S.U.அருண்குமார், நாராயணன் ஆகியோரின் பாடல்கள் அனைத்தும் அருமை

பாலாஜியின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது பிரமாதம் A.சுரேஷ் பிரசாத் படத்தொகுப்பு படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார்.

குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியியல் வன்கோடுமையை சிறப்பாக பதிவு செய்து இருக்கின்றார் இயக்குனர் அருண்குமார். மொத்தத்தில் சித்தா குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்.