• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….

Byadmin

Jul 26, 2021

மதுரை கோச்சடை பகுதியில் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பிவி கதிரவன் தலைமை தாங்கினார் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் அதை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் மற்றும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் 3 புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க நினைக்கும் எண்ணத்தை கைவிட கோரியும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பெண்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்