• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி திரும்பி பார்க்கும் செப்டம்பர்-7.., 22பாரத் ஜோடோ-வின் தடங்கள்…

கன்னியாகுமரியில் கடந்த இதே செப்டம்பர் திங்கள் 07.09.22_யில் இந்தியாவே (காஷ்மீர்_கன்னியாகுமரி)யில் சங்கமம் ஆகியிருந்த நாள்.

மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒவ்வொரு மாநிலத்தின் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியினர், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியினர் என்னும் மிகப்பெரிய மக்கள் சமுத்திரம் அலே அடித்த அந்த நாளில், ராகுல் காந்தி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறை, கடற்கரையில் உள்ள தேசப்பிதா அண்ணல் காந்தியின், காமராஜர் நினைவு மண்டபங்களுக்கு சென்று, அவர் தொடங்கியிருக்கும் நடை பயணத்திற்கான முதல் பிரார்த்தனையை நிறைவு செய்து விட்டு விழா மேடைக்கு செல்லும் முன்,

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை, ராகுல் காந்தியின் கைகளில் கொடுத்து கன்னியாகுமரியிலிருந்நு_ காஷ்மீர் வரையிலான பாரத்ஜோடோ நடைபயணத்தை தொடங்கி வைத்த நிகழ்வு குறித்து, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்ட் 18_யின் ஒற்றை காங்கிரஸ் கவுன்சிலர் ஆனிதாமஸ், அரசியல் டுடே விடம் பகிர்ந்து கொண்ட பாரத் ஜோடோ பற்றிய நினைவலைகள், இளம் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நேற்று நடந்தது போல் இருக்கிறது.!! ஒரு ஆண்டு ஓடி விட்டது.

அகஸ்தீஸ்வரம் சுவாமி விவேகானந்தர் கலை கல்லூரி வளாகத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 8_ம் நாள் தலைவர் ராகுல் காந்தி உடன் நடைபயணம் மேற்கொண்ட பெண்களை, கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜோதி மணி எங்களை ஒருங்கிணைத்து வழி நடத்தினார். குமரி முதல் களியக்காவிளை வரையிலான நடைபயணம் மூன்று நாட்கள் தொடர்ந்து, வில்லுகுறி புனித தேவசகாயம் தேவாலைய பகுதியில் தலைவர் இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த ஊடகம்,பத்திரிகையின் செய்தியாளர்களை சந்தித்தார்.மதிய உணவுக்கு பின் தேவாலயம் வாளகத்தில் ஓய்வின் போது.எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி விஜய் வசந்த் அங்குள்ள ஒரு தாழ்வாரத்தில் படுத்து அசந்து துயில் கொண்டது.

கன்னியாகுமரி முதல், களியக்காவிளை வரையில் வழி நெடுகிலும். சிறுவர், சிறுமியர் மற்றும் வயது வித்தியாசம் இல்லாது இளைஞர்கள், இளம் பெண்கள்,வயது முதிர்ந்த பெரியவர் ராகுல் காந்தியை அவரவர் வீட்டு பிள்ளை போல் காட்டிய அன்பு. நடைபயணத்தின் இடை,இடையே சாலை ஓர கடைகளில் அமர்ந்து டீ, குளிர்பானங்கள் அருந்தியாபோது அவரது பாதுகாவலர்களின் தடுப்பை உடைத்து எளிய மக்களிடம் தலைவர் நடத்திய உரையாடல்.

ராகுல் காந்தி நடைபயணத்தின் போது ஒரு கூட்டம்.ராகுல் காந்தி பயன் படுத்திய டி சர்ட் பல ஆயிரம் மதிப்புடையது, கிறிஸ்தவ பாதிரியார் சந்திப்பை கேவலப்படுத்தி சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரப்பியது.

பாரத்ஜோடே யாத்திரை பல மாநிலங்களை கடந்து மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கடப்பதை கண்டு மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் கொரோனோ பரவல் மீண்டும் வருவது போல் தகவல்கள் உள்ளன.ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் கொரோனோ தொற்று பரவும் என அறிக்கை விட்டது.

ராகுல் காந்தி அத்தனை தடைகளையும் கடந்து திட்டம் இட்ட படியே காஷ்மீர் போய் சேர்ந்து தேசிய கொடியை ஏற்றி அவரது சப்தத்தை நிறைவு செய்தது.இந்தியா வரலாற்று பக்கங்களில் பதிவாகிவிட்ட செய்தி என அவரது பாரத் ஜோடோ நடைபயண நினைவுகளை தெரிவித்தார்.