• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாரதிய ஜனதா கட்சி முன்னாள் ராணுவத்தினர்கள் பிரிவு மாநில மாநாடு…

Byகுமார்

Aug 28, 2023

மதுரையில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் ராணுவத்தினர்கள் பிரிவு மாநில மாநாடு மாநிலத் தலைவர் ராமன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் மாணிக்கம் நடராஜன், மாநிலச் செயலாளர் ஆனந்த ஜெயம் ஆகியோர் வரவேற்று பேசினர். மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மேற்கு மாவட்ட ராணுவ வீரர் பிரிவு தலைவர் ஆண்டி உட்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற 50 விதவைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் 50 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை போன்ற நலத்திட்டங்களை வழங்கி பேசியதாவது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் முன்னாள் ராணுவத்தினர்கள் உருவாக்கிய பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது . அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே முன்னாள ராணுவத்தினரின் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். மத்திய அரசு தற்போதைய ராணுவ துறையை பல்வேறு டிஜிட்டல் நவீன தொழில் நுட்பங்களுடன் உலக நாடுகள் பயப்படுகின்ற வகையில் துடிப்புடன் வைத்து உள்ளது . நமது ராணுவ பிரிவுக்கு பல்வேறு நவீன யுக்திகளை கொண்ட ராணுவ தளவாடங்கள் வாங்கப்பட்டுள்ளது. தேசிய நீரோட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அனைவரும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்தியாவில் பாஜக மட்டுமே வலிமையான கட்சியாகும். பாஜகவில் மட்டுமே நாட்டு மக்களுக்கு பல்வேறு உன்னதமான நலத்திட்டங்களை வழங்க முடியும் . எனவே தேசப்பற்று உடைய அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இந்தியாவை காப்பாற்ற முன் வர வேண்டும் .மத்திய அரசின் நலத் திட்டங்களை தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் எவ்வித ஊழல் குற்றச்சாட்டுகள் இன்றி திறம்பட ஆட்சி செய்து உலக அளவில் இந்தியாவை உற்றுநோக்க வைத்துள்ளார் எனவே இந்தியாவில் மீண்டும் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் இவ்வாறு அவர் கூறினார் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3,000-க்கு மேற்பட்ட முன்னாள்ராணுவத்தினர் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.