தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது திருமண நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடக்காது என சமூக நலன் மற்றும் பெண் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சமூக நலன் மற்றும் பெண் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள பெண்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்; குறிப்பாக குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, கரூர், ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆட்சியில் திருமண நிதியுதவித் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இனி நடக்காது என்ற கீதாஜீவன் இதற்காக சமூக நலத்துறை மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தொரிவித்தார்.
- சாரைப்பாம்பை வனப்பகுதிக்குள் விட்ட தீயணைப்பு வீரர்கள்.,
- கழிவறையை இடித்த முன்னாள் கவுன்சிலர் மருமகன் கைது..,
- எழுச்சிப்பயணம் 50வது நாள் கடந்த நிலையில் வழிபாடு..,
- 42 நாள் குழந்தையை கொலை செய்த தாய்..,
- வாக்குவாதத்தில் ஈடுபட்டதிமுக மாமன்ற உறுப்பினர்..,
- துரோக வரலாறு எனும் அமமுக போஸ்டர்..,
- போதையில் சென்ற இருவர் கார்கள் மீது மோதி சேதம்.,
- மெத்தாபேட்டமைன் கடத்திய 4 பேர் சிறையில் அடைப்பு !
- இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி..,
- 1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது !!!