• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை தின வாழ்த்துக்கள் கூறிய ஆளுநர்..!

Byவிஷா

Aug 22, 2023

இன்று சென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, ஆளுநர் சென்னை தின வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மெட்ராஸ் தினத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்! வியப்பூட்டும் கலாசார பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மிகம், அறிவார்ந்த வலிமை ஆகியவற்றின் இந்த தொடர்ச்சியை அதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேலும் முன்னெடுத்து கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை தினத்தை அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடும் நிலையில், பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.