• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்..!

Byவிஷா

Aug 18, 2023

சுதந்திரப் போராட்ட வீரர்களான புலிதேவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரப் போராட்ட வீரர்களான புலிதேவன் மற்றும் ஒண்டிவீரன் அவர்களின் பிறந்தநாள் விழா ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதேபோல, பூலித்தேவன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சி செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
பொதுமக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தலைவர்களும் சிவகிரி வட்டம் பச்சேரி கிராமத்திற்கு நேரில் வருகை தந்து புலித்தேவன் மற்றும் ஒண்டிவீரன் தலைவர்களின் படத்திற்கு மரியாதை செலுத்துவர். இதனால், முக்கிய நிகழ்ச்சியினை முன்னிட்டு கிராமத்தில் எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் நடைபெறக்கூடாது என்பதற்காக இன்று முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரையிலும் தென்காசி மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கூரிய அரிவாள், லத்தி உள்ளிட்ட பொருட்களை மாவட்டத்திற்குள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.