• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஜெயிலர் திரை விமர்சனம்

Byஜெ.துரை

Aug 10, 2023

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கி ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் ஜெயிலர்.

அன்பான மனைவி அழகான குடும்பம் என அமைதியாகக் காலம் கடத்தி வருகிறார் முத்துவேல் பாண்டியன்(ரஜினி காந்த்). தனது பேரனுடன் யூடியூப் வீடியோக்கள் எடுப்பது புதினா சட்னி இல்லாவிட்டாலும் அட்ஜஸ்ட் செய்து சாப்பிடுவது என பெர்பெக்ட் பென்சன் வாழ்க்கையில் இருக்கும் முத்துவேலுக்கு காவல்துறை அதிகாரியாக இருக்கும் தன் மகனுக்கு ஒரு பெரும் பிரச்சனை வருகிறது.

சிலைக் கடத்தல் கும்பலை பிடிக்க எடுக்கும் முயற்சியில், அந்த கும்பலால் கடத்த படுகிறார். இந்த விஷயம் முத்து வேல் பாண்டியனுக்கு தெரிய வர தன் மகனை தேடி அலைகிறார். உயர் காவல் அதிகாரிகளை சந்தித்து உதவி கேட்கிறார். எந்த பயனும் இல்லை.

ஒரு கட்டத்தில் தன் மகன் இறந்து விட்டதாக தகவல் தெரிய வர, காவல் துறை மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து உள்ளார் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதை நம்ம மறுத்த முத்து வேல் பாண்டியன்(ரஜினி காந்த்) தன் மகன் சிலை கடத்தல் கும்பல் தான் கொலை செய்துள்ளனர் என்று அவர்களை தேடி தேடி பழிவாங்குவது தான் படத்தின் கதை.

வில்லனாக விநாயகன் தன் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல சிறப்பாக நடித்துள்ளார்.

சிறப்பு தோற்றத்தில் வரும் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி செராஃப் மாஸ் நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. பாரதியார் புகழ் யோகிபாபுவின் பஞ்ச் நம்மை சிரிக்க வைக்கிறது.

மாரிமுத்து, கிஷோர், ரம்யா கிருஷ்ணன், சுனில், தமன்னா, வைபவ் பிரதர் சுனில் ரெட்டி, கிங்ஸ்லி, விடிவி கணேஷ், ரித்து என ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் வந்து போகின்றனர்.

‘காவாலா’ பாடலுக்கு ஆடிய தமன்னா ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.

ரஜினிக்காக அந்த தன் இளம் வயது பிளாஷ் பேக் காட்சிகள் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு கம் பேக் கொடுத்துள்ளார். அனிருத் பின்னணி இசை காட்சிகளுக்கு சிறப்பு சேர்த்துள்ளது

விஜய் கார்த்தி கண்ணனின் கேமரா கண்கள் சார்ப்!

விநாயகனை சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் ரஜினிக்கான மாஸ் செம!

காவாலா பாடல் செட் காஸ்டியூம்ஸ் ஜானி மாஸ்டர், தமன்னா என அந்த பாடல் காட்சி ரசிகர்களை மெய் மறுக்க செய்துள்ளது.

கோயிலுக்குள் இருக்கும் சிலையை கடத்த தெய்வமே நீதான் காப்பாத்தணும் என வில்லன் வேண்டி கொள்வது போன்ற காட்சிகள், கமர்ஷியல், ஆக்சன் என செதுக்கியுள்ளார் இயக்குனர்.

ரஜினியின் லேட்டஸ்ட் படங்களை ஒப்பிடுகையில் இது நிச்சயம் நல்லதொரு கம்பேக் என்று சொல்லலாம்.

மொத்தத்தில் ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக கம் பேக் கொடுத்துள்ளார்.