• Mon. Nov 3rd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

உயிர் நீத்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு நினைவுத்தூன் எழுப்புமா? தமிழக அரசுக்கு கோரிக்கை எழுப்பிய மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழகம்..,

Byதரணி

Jul 2, 2023

ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிர் நீத்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு நினைவுத்தூன் எழுப்பி அரசு அஞ்சலி செலுத்த வேண்டும் என மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழகம் சார்பாக தென்மண்டல அளவில் நடந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் தாமிரபரணியில் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி உயிர்நீத்த மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நினைவு தினம் வருகின்ற ஜூலை 23ஆம் தேதி இந்நிலையில் நெல்லை தாமிரபரணியில் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பாக அஞ்சலி செலுத்துவது தொடர்பான தென் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி வள்ளுவர்நகர்இ சமுதாய மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பா.அன்புராஜ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்திற்கு மாநிலபொதுச் செயலாளர் செல்லப்பா, மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் பால் துரை, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் முனியசாமி மாநிலத் துணைப்பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 7க்கு மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானத்தில் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டில் அடிப்படை வசதி மற்றும் செவிலியர்களின் அலட்சியப் போக்கினை சரி செய்து விட வேண்டும். மேலும் செவிலியர்களை அதிகப்படுத்த வேண்டும். ECG&ECO கருவிகள் இருந்தும் ஆனு மருத்துவர் இல்லை. ஆகவே ஆண் மருத்துவரை உடனடியாக பணியமர்த்த வேண்டும் உயிர்காக்கும் மருத்துவர்கள் தினந்தோறும் பணியில் இருக்கும்படி பணி அமர்த்த வேண்டும். மேலும் ரத்தப் பரிசோதனை மருத்துவரை நியமித்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். கோவில்பட்டி கிரு~;ணா நகரில் குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால் அதில் வழங்கப்பட்ட வீடுகள் அனைத்தும் சுமார் 90 சதவிகிதம் வீடுகள் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் வீட்டுக்கு உரிமையாளர்கள் யாரும் குடிபெயரவில்லை. அனைத்து வீடுகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. சிலர் வீடுகளை விற்பனை செய்தும் வருகின்றனர். ஆகவே தமிழக அரசு இதில் விசாரணை நடத்தி முறைப்படி வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும் என தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து உட்பட்ட மந்தித்தோப்பு சாலையில், சர்வேஎண் 479 1.2 ல் அருந்ததியர் சமுதாயத்திற்கு என்று வழங்கப்பட்ட இடத்தில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர் ஆகவே தமிழக அரசு விசாரணை செய்து உரிய இடத்தை உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தையம் இதைத் தொடர்ந்து ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிர் நீத்த மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 17 பேருக்கு தமிழக அரசு நினைவுத்துண் எழுப்பி அரசு விழா எடுக்க வேண்டும். இறந்த தினமான ஜூலை 23ம் தேதி தாமிரபரணிக்கு 50 க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றினர். இக்கூட்டத்திற்கு மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழகம் தென் மண்டல மகளிர் அணி செயலாளர் சுப்புலட்சுமிஇ விருதுநகர் மாவட்ட செயலாளர் மாரிமுத்துஇ விருதுநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கருப்பசாமிஇ தென்காசி மாவட்ட செயலாளர் போஸ் பாண்டியன்இ தென்காசி மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணகுமார்இ ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். மேற்கு ஒன்றிய செயலாளர் நெப்போலியன்,கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்மாடசாமி,மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமுதா, நகர மகளிர் அணி செயலாளர் செல்வக்கனி, ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் முத்துலட்சுமி, ஒன்றிய துணை மகளிரணி செயலாளர் மணி, ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம், ஒன்றிய துணைச் செயலாளர் மகேஷ், நகர இளைஞரணி செயலாளர் கோகுல், ராக்கையா, மகாலிங்கம், கோபால், குட்டி, காளிமுத்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் அ.பிரகாஷ் நன்றி உரை கூறினார். கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் விருதுநகர் மாவட்டம் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.