• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சுசீந்திரத்தில் தலைகீழாக விழுந்த விக்ரகம்! வேதனையில் பக்தர்கள்..,

ஆனி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்,
கோவிலில் முதல் சுற்று சுற்றி இரண்டாம் சுற்று வரும் சுவாமி வரும் போது எதிர்பாராத விதமாக சுவாமி வாகனமான சப்பரம் தலைகீழாக விழுந்ததால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது, அதில் இருந்த சுவாமி விக்ரகமும் கீழே விழுந்ததில் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் சுவாமி,சுவாமி ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டு விட கூடாது என வேதனை அடைந்தனர், பின்னர் கோவில் அர்ச்சகர்கள், நிர்வாகிகள் உடனடியாக சுவாமியையும் சப்பரத்தையும் சரி செய்து மீண்டும் மூன்றாம் சுற்று சுற்றி கோயிலுக்குள் சென்றனர், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.