சிவகங்கை மாவட்ட பள்ளி வாகனங்கள் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில், பள்ளி வாகனங்கள் அனைத்தும் சோதனை நடைபெற்றது.
இதில் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 425 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வாகனத்தை தரம் பார்த்து அரசு விதிமுறைகளின்படி வாகனம் சரிவர இயங்குகிறதா, அதில் வைக்க வேண்டிய முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட அரசு விதிமுறைகளின்படி வாகனங்கள் சரிபார்க்கப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி, செய்தியாளர்களிடம் பேட்டியின் போது தெரிவித்ததாவது..,
மாவட்டத்தில தற்போது மாவட்டத்தில் உள்ள 425 பள்ளி வாகனங்கள் ஆய்வு உட்படுத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது. பள்ளி வாகனங்களில் அரசு விதிமுறைகளின்படி முதலுதவி பெட்டி தீயணைப்பு கருவி வாகனங்களில் இயக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளி வாகனங்களை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ஓட்டுனர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.













; ?>)
; ?>)
; ?>)