• Sun. Oct 5th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சமூக அக்கறை கொண்ட கதையில் கதாநாயகனாக நடிக்கும் ராமராஜன்

Byதன பாலன்

Jun 15, 2023

எண்பது தொண்ணூறுகளின் காலகட்டத்தில் தொடர்ந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்து மக்கள் நாயகனாக, வெற்றிகரமாக நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவக்கியுள்ளார். இந்தப்படம் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் ராமராஜன்.

அந்த வகையில் 7 ஆத்ரி ஃபிலிம் பேக்டரி சார்பில் தீனதயாளன் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் ராமராஜன். இது அவரது 46 ஆவது படமாக உருவாகிறது. ராமராஜன் நடித்துள்ள சாமானியன் படத்தின் கதாசிரியரான கார்த்திக் குமார் V என்பவர் இந்த படத்தின் கதையை எழுதி உள்ளதுடன் இந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

சாமானியன் படத்தை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் V.மதியழகன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் முதன் முதலாக நடிகராகவும் அவதாரம் எடுக்கிறார்.

சாமானியன் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா தான் இசையமைக்கிறார். ரிச்சர்ட் பிராங்க்ளின் என்பவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் இந்த படத்தில் படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொள்கிறார்.

இந்த படம் குறித்து இயக்குனர் கார்த்திக் குமார் V கூறும்போது, “ராமராஜன் சார் கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதனால் அவர் அதற்கான சரியான கதையை தேடியபோது, நான் எழுதியிருந்த சாமானியன் கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. முழுக்க முழுக்க கதையை நம்பியே அவர் சாமானியன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அந்த படத்தை முடித்ததும் என்னை அழைத்து, அடுத்ததாக இன்னொரு படம் பண்ண தயாராகி விட்டேன்.. உங்களிடம் ஏதாவது கதை இருக்கிறதா என்று கேட்டார். அப்போது நான் சொன்ன ஒரு கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. அதுமட்டுமல்ல கடந்த ஒரு வருடமாக சாமானியன் படத்தில் கிட்டத்தட்ட ஒரு இணை இயக்குனர் போன்றே அவருடன் இணைந்து பயணித்து வந்துள்ளேன். அதனால் இந்த படத்தை நீங்களே இயக்கினால் நன்றாக இருக்கும் என என்னை உற்சாகப்படுத்தினார் ராமராஜன். அதனால் இந்த படத்தின் மூலம் நான் இயக்குனராகவும் மாறி உள்ளேன்.

அடிப்படையில் நான் ஒரு கதாசிரியர் மட்டும் தான்.. யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியது இல்லை.. பல படங்களில் கதை ஆலோசகராக பணியாற்றி உள்ளேன்.. அதேசமயம் கதாசிரியராக இருந்து இயக்குனராக மாறுவது ஒன்றும் சுமையான விஷயமும் அல்ல. கதையுடனே பயணித்து இருப்பதால் படத்தை இயக்குவது இன்னும் எளிதாகவே இருக்கும்.

சாமானியன் படத்தின் கதை என் வாழ்க்கையில் 2018ல் நான் சந்தித்த வலியை மையப்படுத்தி உருவானது. அந்த படத்திற்கு ராமராஜன் பொருத்தமாக இருந்தார். ஆனால் இந்த புதிய படத்திற்கு ராமராஜனை மனதில் வைத்தே கதையை உருவாக்கி உள்ளேன். இப்போது மக்களில் பலரும் சந்திக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டது தான் இந்த கதையும். ஆனால் சாமானியன் படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இரண்டும் வெவ்வேறாக இருக்கும்..

இந்த படத்தில் நடிகர் ராமராஜன் இதுநாள் வரை பார்த்த கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு ஒரு சாதாரண வழக்கறிஞர் ஆக நடிக்கிறார். அவருக்குள் தற்போது இருக்கும் எண்ணங்களும் ஆர்வமும் கடந்த ஒரு வருடமாக அவருடன் பயணிப்பதால் எனக்கு நன்றாகவே தெரியும். அந்த வகையில் இதுவரை பார்த்திராத ஒரு ராமராஜன் படமாக மிகப்பிரமாண்டமாக மாஸான படமாக இது இருக்கும்.

நான் இயக்குனர் ஷங்கரின் தீவிரமான ரசிகன். அவரது படங்கள் அனைத்திலும் ஒரு சமூக அக்கறை இருக்கும். அது படத்தில் பிரம்மாண்டமாக சொல்லப்பட்டிருக்கும். எனக்கும் அதேபோன்று சமூக அக்கறை உள்ள கதைகளை பிரமாண்டமாக உருவாக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். அதனால் தான் தொடர்ந்து அதே போன்று சமூக அக்கறை கொண்ட கதைகளை உருவாக்கி வருகிறேன்.

இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமானாலும் எப்போதும் நான் ஒரு கதாசிரியர் என்று சொல்வதில் தான் எனக்கு பெருமை. மலையாள திரை உலகில் இயக்குனருக்கு அடுத்ததாக கதாசிரியருக்கு தான் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழ் சினிமாவிலும் அதுபோன்று கதாசிரியர்கள் நிறைய உருவாக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆர்வம்.. இதற்காக நான் தற்போது சினிமாவிற்கு நுழைபவர்களுக்காக வகுப்புகளும் எடுத்து வருகிறேன்

இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளதுடன் நானே டைரக்சனையும் கவனிப்பதால், வசனங்களை எழுதும் பொறுப்பை மதன் கார்க்கியிடம் கொடுக்கலாம் என பேசி வருகிறோம். அது உறுதியாகி, முழுமையான வசனங்கள் தயாரானதும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை முழு வீச்சில் துவங்க இருக்கிறோம். கதாநாயகியாக நடிக்க மீனா போன்ற முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.

இதற்கு முன்னதாக இந்த படத்தை பூஜையுடன் துவங்கி டீசருக்கான பணிகளை செய்து வருகிறோம். இந்த டீசரை முடித்துவிட்டு இசைஞானி இளையராஜாவை சந்தித்து போட்டு காட்ட இருக்கிறோம். அதன்பிறகு இந்த படத்தில் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை விரைவில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.