• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது.., முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு..!

Byவிஷா

Jun 14, 2023

அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.