மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்வதை தடுக்க கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பாக மதுரை கிரைம் பிரான்ச் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் எஸ்டிபிஐ கட்சி தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார்.பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது:
SDPI கட்சி, மதுரையிலுள்ள ஜனநாயக அமைப்புகள், ஜமாத் பிரமுகர் அனைவரும் ஒன்றிணைந்து UAPA என்ற கருப்பு சட்டத்திற்கு எதிராக கைது செய்யப்படுகிற அப்பாவிகள் காப்பாற்ற வழக்காடுகின்ற வழக்கறிஞர்களை சிறையில் அடைத்திருக்கின்ற கொடுமைக்கு நீதி வேண்டி மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
இந்தியாவை ஆளுகின்ற மோடி, அமித்ஷா அரசு எதிரிகளை பழி வாங்குவதற்கு, தன்னை எதிர்க்கின்றவர்கள், அறவழி சிந்தனையாளர்களை முடக்குவதற்காக UAPA, NIA, UD போன்ற அமைப்புகளை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.
இந்தச் சட்டங்களால் அப்பாவிகள் துன்புறுத்தப்படுகின்றனர். மதுரையில் 2 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 2 பேரும் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்கு ஆடினார்கள் என்ற செயலைத் தவிர எந்த தவறும் செய்யாதவர்களை இன்று குறிவைத்து சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் தற்போது கைது செய்யப்படுகிறார்கள்
இதனை தடுக்க தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட வேண்டும்
தமிழ்நாட்டிலே சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடக்கின்ற அராஜகத்திற்கு எதிரான தமிழக முதல்வர் இதில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த போராட்டத்தை தற்போது நடத்திக் கொண்டிருக்கின்றோம்
அப்பாவிகள் விடுதலை செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மல்யுத்த வீராங்கனைகள் தற்போது டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்
பெண்களின் மீது பெண்களின் முன்னேற்றத்தின் மீதோ சிறிது அளவு கூட தரிசனம் கொண்டவர்கள் நாங்கள் இல்லை என்பதை பாஜக டெல்லியில் தற்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறது
எவ்வாறு பாஜக நிர்வாகிகள் பெண்களை கொச்சைப்படுத்துகிறார்களோ அதே போல நாட்டின் கவுரவத்தை காக்க உலக நாடுகளுக்கு சென்று பதக்கங்களை பெற்ற மரியாதைக்குரிய இந்தியாவின் தங்கங்கள் டெல்லியில் தற்போது அவமானப்படுத்தப்பட்டு வருகின்றனர்
எனவே இது நமக்கு சொல்கின்ற செய்தி பாஜக யாரையும் காப்பவர்கள் அல்ல அப்பாவிகளை சிதைப்பவர்கள் பெண்களை கொச்சைப்படுத்துபவர்கள் என்பது தெரிய வருகிறது.
எனவே 2024 இத்தனை அநீதிக்கு, அவமானத்திற்கு காரணமான பாஜக அரசு இந்தியாவில் இருந்து துடைத்து எறியப்பட வேண்டும் என்று ஒவ்வொரு குடிமகனும் அதற்காக வேண்டி சபதம் எடுக்க வேண்டிய தருணம் இது என்று நாங்கள் கருதுகிறோம் என கூறினார்.








