• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!

Byவிஷா

May 30, 2023

டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் மத்திய அரசின் தொழிற்பயிற்சி குழு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையத்தில் எலக்ட்ரீசியன், வெல்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் ஆகிய பிரிவுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க உள்ள நிலையில் இதற்கு இரண்டு ஆண்டு பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
இந்த இரண்டு ஆண்டு பயிற்சி வகுப்பில் சேர மாணவர்கள் கட்டாயம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் சேர இருக்கும் மாணவர்கள் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி மாலை 5 மணி வரை செய்தித்தாள் காகித நிறுவனத்தின் முதல்வரை நேரில் அணுகி அதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். அந்த விண்ணப்பங்களை ஜூன் ஒன்பதாம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.