• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி மாவட்டத்தில் 374 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம்-அமைச்சர் த.மனோ தங்கராஜ் தகவல்

கன்னியாகுமரி இரணியல் பேரூராட்சி மற்றும் 374 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் துவக்க நிகழ்ச்சி பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தகவல்
தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பேரூராட்சி மற்றும் 374 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தினையும், குழித்துறை நகராட்சிக்கான குடிநீர் திட்டம், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம், முட்டம் ஊராட்சியில் உள்ள 3 குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டம், தூத்தூர் ஊராட்சிக்கான குடிநீர் திட்டம் என ரூ.212 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் .கே.என்.நேரு அ திறந்து வைக்கிறார்கள்.
மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.54.74 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.214.34 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், விழாப்பேரூரை ஆற்ற உள்ளார்கள். நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் .த.மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்கள்.