• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா – உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

ByA.Tamilselvan

May 25, 2023

சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவுக்காக மக்களவை பொதுச் செயலாளர் உத்பல் குமார் சிங், விழா அழைப்பிதழை எம்.பி.க்களுக்கு அனுப்பி உள்ளார். ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டிடம் குடியரசு தலைவரால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனை மத்திய அரசு நிராகரிக்க, திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க போவதாக திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு கட்சிகள் என 19 கட்சிகள் கூட்டாக அறிவித்தன.இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் திறந்து வைக்க வேண்டும் என மக்களவை செயலகம் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.