• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

போண்டா மணி மகள் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர்!

Byஜெ.துரை

May 14, 2023

காமெடி நடிகர் போண்டா மணி மகள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வானதை தொடர்ந்து, மேல் படிப்பு செலவு முழுவதையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஏற்றுக் கொண்டார்!

இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு, வாரம் இருமுறை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொண்டுள்ளார் நடிகர் போண்டா மணி. மேலும் இந்த நிலையிலும் குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்தும் வருகிறார்.

இந்த அவருடைய நிலையை முற்றிலும் அறிந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வான போண்டா மணியின் மகள் சாய் குமாரியின் மேல்படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொண்டு, அவருடைய வேல்ஸ் கல்லூரியில் அவருக்கு பி.சி.ஏ படிக்க சீட் கொடுத்துள்ளார்.

இதற்கு நடிகர் போண்டா மணி தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்!