தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமார் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்
குமரி மாவட்டத்தை சேர்ந்த பி.டி.செல்வகுமார்.இவரது வாழ்க்கை பயணத்தை.’ஜெமினி சினிமா’ இதழில் செய்தியாளராக தொடங்கியவர்.இந்த பணிக்காலத்தில் பல சினிமா பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள் வரிசையில் திரைப்பட இயக்குநர் எஸ்.எ.சந்திரசேகர் ஒருவர் என்ற நிலையில் கால ஓட்டம் இருவரிடையே நல்ல நட்பை மலர செய்தது மட்டுமல்ல தந்தை மகன் என்ற உணர்வு பூர்வமான ஒரு நட்பை ஏற்படுத்தியதின் விளைவு. பி.டி.செல்வகுமார் ஜெமினி சினிமாவில் பத்திரிகையாளர் பணியை விட்டு.எஸ்.எ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். எஸ்.ஏ.சந்திர சேகர் தம்பதிகளுக்கு ஒரு மகனும், மகளும் .இவர்களை பள்ளியில் கொண்டு விடுவது, பத்திரமாக திருப்பி அழைத்து வருவது.மாலை நேரத்தில் பிள்ளைகள் இருவரை கவனிப்பது என்ற பணியுடன். விஜய்யின் கல்லூரி காலத்திலே சினிமா கனவு அந்த இளைஞன் மனதில் துளிர் விட . விஜியின் கனவுகளுக்கு நீர் ஊற்றி வளர்த்து தமிழக சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இன்று உலா வரும் வரை. விஜியின் பி ஆர்.ஓ வாக பணியாற்றியதின் பரிசாக திரைப்பட தயாரிப்பாளர் ஆனார்.இவர் தயாரித்த ‘புலி’ படத்தை வெளியிட முடியாத தடை வந்த போது. இவருக்கு இயக்குநர் டி.ராஜேந்திரன் உதவ முன் வந்ததுடன் குறித்த தினத்தில் புலி திரைப்படம் வெளியானது என்பது இவரது திரை உலக பயணத்தில் ஒரு மைல் கல். சினிமாவில் சம்பாதித்த பணத்தை பொது சேவையில் சிலவு செய்யவே இவர்’கலப்பை’என்றொரு அமைப்பை உருவாக்கி குமரி மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் உதவி கரம் நீடடுவதை தொடர்ந்து செய்து வரும் பி.டி.செல்லகுமார்.அண்மையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை.குமரியில் ‘கலப்பை’இயக்கத்தை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவிக்கு பி.டி. செல்வகுமார் தேர்வு













; ?>)
; ?>)
; ?>)