• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி..!

Byவிஷா

May 2, 2023

இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் வங்கிக்கு செல்லாமல் நேரடியாக வீட்டிலிருந்து கொண்டு ஆன்லைன் மூலமாக அனைத்தையும் முடித்து விடுகின்றனர். 24 மணி நேரமும் வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் வங்கி சேவைகள் முகவர்கள் மூலமாக வீடு தேடி வந்தும் வழங்கப்படுகின்றது. தற்போது பொதுத்துறை வங்கிகள் முதல் தனியார் துறை வங்கிகள் வரை டோர் ஸ்டேப் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.
இதன் மூலமாக வங்கி முகவர் வீட்டிற்கு வந்து கணக்கு தொடங்குதல், பணம் எடுத்தல் மற்றும் டெபாசிட் செய்தல் உள்ளிட்ட சேவைகளை வழங்குகின்றன. இதில் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 75 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் நாளொன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்தல் மற்றும் இருப்பு வைத்தல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்த சேவை 70-க்கும் மேற்பட்ட மூத்த குடிமகன் மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதனைப் பெறுவதற்கு மொபைல் எண்ணை வங்கி கணக்குடன் பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் வாடிக்கையாளரின் வீட்டில் இருந்து வங்கி கிளை 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.