• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரை சோழவந்தான் அருகே அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா

ByKalamegam Viswanathan

May 2, 2023

சோழவந்தான் அருகே கீழப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா பால்குடம் எடுத்துபக்தர்கள் வழிபாடு
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சி எம்.கீழபட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் திங்கள் கிழமை காலை கருப்பு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து, மாலை குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை பால்குடம் பக்தர்கள் எடுத்தனர். கிராம முக்கிய வீதிகளில் ஊர்வலம் வலம் வந்து திருக்கோவிலை அடைந்தது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மாலை சக்தி கரகம்,தீச்சட்டி எடுத்தல் ஆயிரம் கண்பானைஎடுத்தல் நடைபெறுகிறது. இரவு 9 மணி அளவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. புதன்கிழமை பொங்கல் வைத்து சக்தி கிடாய் வெட்டி, சக்தி கரகம் எடுத்து முளைப்பாரி கரைத்தல் நிகழ்வு நடைபெறும். ஏற்பாடுகளை எம். கீழப்பட்டி கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.