• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

11 கோரிக்கை முழக்கங்களுடன் ஈரோட்டில் மே.5 ல் வணிகர்தின மாநாடு

Byஜெ.துரை

Apr 30, 2023

உணவு தர நிர்ணய பாதுகாப்பு சட்டத்தை முறைப்படுத்த வேண்டும் .ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்த வேண்டும் 11 கோரிக்கை முழக்கங்களுடன்.வணிகர் உரிமை முழக்க மாநாடாக அமையும்.வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா பேட்டி
40 ஆவது வணிகர் தின மாநாடு வணிகர் உரிமை முழக்க மாநாடாக மே ஐந்தாம் தேதி ஈரோட்டில் நடைபெறுகிறது.


இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மற்றும் தென்சென்னை மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஜாபர்கான் பேட்டையில் நடைபெற்றது.ஆலோசனைக்குப் பின் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அளித்த பேட்டி…ஜிஎஸ்டி வரியை செலுத்துவதை எளிமைப்படுத்த வேண்டும்.உணவு தர நிர்ணய பாதுகாப்பு சட்டத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து இந்த மாநாடு நடைபெறுகிறது.தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து அமைச்சர்கள், வணிகர் அமைப்புகளின் மாநிலத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலிருந்து ஏழு லட்சம் வணிகர்கள் பங்கேற்பார்கள் என தெரிவித்தார்…