• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை அரசு அருங்காட்சியகத்தில் பாண்டியர் கால ஓவியங்கள்..!

Byவிஷா

Apr 28, 2023

மதுரை அரசு அருங்காட்சியகத்தில் பிரண்ட்ஸ் ஆப் ஹெரிட்டேஜ் மூலம் பாண்டிய நாட்டு ஓவியங்கள் பயிலரகம் என்ற தலைப்பில் பாண்டிய கால ஓவியங்கள் வரையும் நிகழ்வு நடைபெற்றது.
இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த பாண்டிய கால ஓவியங்கள் பயிலரங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மிகச் சிறந்த ஓவியர்கள் கலந்து கொண்டனர். பிரண்ட்ஸ் ஆப் ஹெரிட்டேஜ் சார்பாக பாண்டிய நாட்டு ஓவியங்களைச் சிறந்த ஓவியர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதனைப் பார்த்து ஓவியர்கள் தத்ரூபமாகவும் கலைநுட்பத்துடனும் வரைந்தனர். 20க்கும் மேற்பட்ட ஓவியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இரண்டு நாட்களாக பாண்டிய கால ஓவியங்களை வரைந்தனர்.
இந்த நிலையில் கலை நுட்பத்துடன் வரைந்த பாண்டிய நாட்டுக்கால ஓவியங்களை மக்களுக்கும் எடுத்துரைக்கக் கூடிய வகையில் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்காக அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்று அரசு அருங்காட்சியகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.