• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜி ஸ்கொயர் ரெய்டு : மாவீரன் படத்திற்கு சிக்கலா..!

Byவிஷா

Apr 25, 2023

ஜி ஸ்கொயர் அலுவலகங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையால் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திற்கு சிக்கல் எழலாம் என கோலிவுட்டில் தகவல் பரவி இருக்கிறது. தமிழ் திரைத்துறையில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது நடிக்கும் படம் மாவீரன். மண்டேலா’ படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் உருவாகிறது. மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் மாவீரன் திரைப்படமானது வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. சரி இதில் என்ன சிக்கல் இருக்கிறது என்கிறீர்களா? இருக்கிறது. மாவீரன் திரைப்படத்தை அருண் விஸ்வா என்பவர்தான் தயாரிக்கிறார்.
இவர் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் இருந்து பண உதவி பெற்றுதான் இந்த படத்தை தயாரித்து இருக்கிறாராம். ஆகையால் வருமான வரி சோதனையில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள் சிக்கும் பட்சத்தில் மாவீரன் படத்தின் பக்கம் வருமான வரித்துறை திரும்ப வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகையால் மாவீரன் திரைப்படத்திற்கு சிக்கல் வந்து விடுமோ என்ற அச்சத்தில் படக்குழுவினர் இருக்கிறார்கள்.