• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை புறநகர் பகுதிகளில் காற்றுடன் பெய்த மழையால் கார் மீது மரம் விழுந்து விபத்து

ByKalamegam Viswanathan

Apr 24, 2023

மதுரை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் லேசான மழை; காற்றில் மரம் சாய்ந்து கார் மீது விழுந்ததில் மரத்தை வெட்டி காரை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்
மதுரை புறநகர் பகுதிகளான திருப்பரங்குன்றம், அவனியாபுரம், திருநகர் ஆகிய பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் லேசான சாரல் மழை பெய்தது. வெப்ப சலனம் காரணமாக பெய்த இந்த மலையால் தற்போது புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.


பலத்த காற்றுடன் மழை பெய்ததில் மதுரை திருநகர் முதல் ஸ்டாப் அருகே உள்ள பாண்டியன் நகரில் இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான புதிய கார் மீது பெரிய ராட்சத மரம் சாய்ந்ததில் காரில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் நிறைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராடி காருக்கு மேலும் சேதாரம் ஆகாமல் மரத்தை மட்டும் வெட்டி மரத்துக்கு அடியில் சிக்கியிருந்த காரை அகற்றினர். இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.