• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்- பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ByKalamegam Viswanathan

Apr 21, 2023

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகேசன் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார்.ஆகியோர் வரவேற்றனர். இதில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் சண்முக பாண்டிய ராஜா, ரேகா ராமச்சந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் முனியாண்டி, துரை புஷ்பம்.மருத்துவர் அணி டாக்டர் கருப்பையா, , ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம், கருப்பட்டி தங்கபாண்டி நகர இளைஞரணி கேபிள் மணி, இலக்கிய அணி மணி, 7வது வார்டு செயலாளர் மணி 1 முத்துப்பாண்டி, ஒன்றிய இளைஞரணி தண்டபாணி, , பாசறை அழகர், 10வது வார்டு செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் துரைக்கண்ணன், ஜெயபிரகாஷ், பேரூர் துணை செயலாளர் தியாகு, வர்த்தக அணி கென்னடி, பெட்ரோல் பங்க் சசி பி ஆர் சி நாகராஜ், உட்பட வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.