• Mon. Apr 29th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 15, 2023

சிந்தனைத்துளிகள்

நம் பயணம் குறுகியது. நமது நினைவில் வைக்கவும்

ஒரு பெண் பேருந்தில் ஏறி ஒரு ஆணின் அருகில் அமர்ந்து,இடம் போதாமையால் அவரை திட்டி கொண்டிருந்தாள்.
அந்த நபர் அமைதியாக இருந்தபோது, அந்தப் பெண் உங்களை திட்டி கொண்டு இருக்கும் போது, ஏன் அமைதியாக இருந்தீர்கள் என்று அருகிலிருந்த பெண்மணி கேட்டார்.
அந்த மனிதன் அவருக்கு புன்னகையுடன் பதிலளித்தார்: ஏனெனில், எனது பயணம் மிகக் குறுகியதாக இருப்பதால் முக்கியமற்ற ஒன்றைப் பற்றி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறேன்”
இந்த பதில் அந்தப் பெண்ணை மிகவும் யோசிக்க செய்தது, மேலும் அவர் அந்த மனிதனிடம் மன்னிப்புக் கேட்டாள், மேலும் அவரது வார்த்தைகள் பொன்னெழுத்தால் எழுதப்பட வேண்டும் என்று நினைத்தார்.
இவ்வுலகில் நமது நேரம் மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும், பயனற்ற வாக்குவாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி ஆகியவை நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க்கும் ஆபத்தானது.
யாராவது உங்கள் மனதை காயப்படுத்தினார்களா? அமைதியாய் இருக்கவும்.ஏனெனில்
நம் பயணம் மிகவும் குறுகியது.
யாராவது உங்களைக் காட்டிக்கொடுத்தார்களா, மிரட்டினார்களா, ஏமாற்றினார்களா அல்லது அவமானப்படுத்தினார்களா?
ஓய்வெடுங்கள் – மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். ஏனெனில், நம் பயணம் மிகவும் குறுகியது.

காரணம் இல்லாமல் யாராவது உங்களை அவமானப்படுத்தினார்களா?
அமைதியாய் இருக்கவும். புறக்கணிக்கவும். ஏனெனில், நம் பயணம் மிகவும் குறுகியது.
உங்களுக்குப் பிடிக்காத கருத்தை யாராவது தெரிவித்திருக்கிறார்களா?
அமைதியாய் இருக்கவும். புறக்கணிக்கவும். மன்னிக்கவும்,மறக்கவும் பழகி கொள்ளுங்கள். ஏனெனில், நம் பயணம் மிகவும் குறுகியது.
சிலர் நமக்கு என்ன பிரச்சனைகளை கொண்டு வந்தாலும்,
அதை நாம் நினைத்தால் தான் பிரச்சனை, நினைவில் கொள்ளுங்கள்.
நாம் ஒன்றாக பயணம் செய்வது மிகவும் குறுகியதாக உள்ளது.
நம் பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது. நாளை என்பதை யாரும் பார்க்கமுடியாது. அது எப்போது நிறுத்தப்படும் என்றும் யாருக்கும் தெரியாது.
நாம் ஒன்றாகப் பயணம் செய்வது மிகக் குறைவு.
நண்பர்களையும் குடும்பத்தினரையும் மற்றும் நமக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சக ஊழியர்கள், மேலதிகாரிகள் அனைவரையும் பாராட்டுவோம். அவர்களிடம் நல்ல நகைச்சுவையுடன் பேசவும் அவர்களை மதிக்கவும். மரியாதையாகவும், அன்பாகவும், மன்னிப்பவராகவும் எப்போதும் இருப்போம். ஏனெனில் நம் பயணம் மிகவும் குறுகியது.
உங்கள் புன்னகையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்…. நீங்கள் விரும்பும் அளவிற்கு அழகாக இருக்க உங்கள் பாதையை தேர்ந்தெடுங்கள் எப்போதும் மறக்காதீர்கள். நம் பயணம் மிகவும் குறுகியது

நாமும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்..

உலகெங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *