• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

‘இணை நோய் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ByA.Tamilselvan

Apr 11, 2023

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்தால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த சிறப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அவர், ‘இணை நோய் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கொரானா பரவல் தொடங்கியதுமே, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தினார். இதனை நான்காவது அலையாக கருத முடியாது. இருப்பினும் மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என அறிவித்துள்ளோம். முதலமைச்சர் எதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என சொல்லியுள்ளார்’ என்றார்.