• Tue. Apr 30th, 2024

விக்ரம் பிறந்தநாளில் தங்கலான் வீடியோ வெளியீடு

Byதன பாலன்

Apr 10, 2023

நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ‘தங்கலான்’ படத்தின் வீடியோ ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப்பிறகு நடிகர் விக்ரம்பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’படத்தில் நடித்து வருகிறார்.ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. படத்தின் 80% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்தாண்டு இறுதியில் படம் வெளியாக உள்ளது.இந்நிலையில் நடிகர் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 17-ம் தேதி படத்தின் வீடியோ காட்சி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *