• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Oct 15, 2021

ஒரு ஊரில் உள்ள பெரிய கோவில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன. திடீரென்று கோவிலில் திருப்பணி நடந்த காரணத்தால், அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடிப் பறந்தன.
வழியில் ஒரு தேவாலயத்தை கண்டன. அங்கு சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்த புறாக்களும் அங்கு குடியேறின. சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது. தேவாலயம் புதுப்பிக்க தயாரானது. இப்போது இங்கு இருந்து சென்ற பறவைகளும் அங்கு இருந்த பறவைகளும் வேறு இடம் தேடி பறந்தன.


வழியில் ஒரு மசூதியை கண்டது அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின. சில நாட்கள் கழித்து ரமலான் வந்தது வழக்கம் போல் இடம் தேடி பறந்தன.
இப்போது மூன்று இடத்திலும் உள்ள புறாக்களும் கோயிலில் குடியேறின. கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.


ஒரு குஞ்சுப்புறா தாய் புறாவுடன் கேட்டது “ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?” என்று…
அதற்கு அந்த தாய் புறா சொன்னது “நாம் இங்கு இருந்த போதும் புறா தான், தேவாலயத்துக்கு போனபோதும் புறாதான், மசூதிக்கு போன போதும் புறா தான்”,
ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் “இந்து” சர்ச்சுக்கு போனால் “கிறிஸ்த்தவன்” “மசூதிக்கு போனால் “முஸ்லிம்” என்றது;


குழம்பிய குட்டி புறா “அது எப்படி நாம் எங்கு போனாலும் புறாதானே அதுபோல தானே மனிதர்களும்” என்றது.


அதற்கு தாய் புறா “இது புரிந்ததனால் தான் நாம் மேலே இருக்கிறோம், இவர்கள் கீழே இருக்கிறார்கள்” என்றது..