• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இயக்குனர் பாலாவின் வணங்கான் படப்பிடிப்பில் துணைநடிகை மீது தாக்குதல்

பாலா இயக்கத்தில் தயாராகும் வணங்கான் திரைப்பட துணை நடிகை லிண்டா மீது தாக்குதல். கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஒருங்ணைப்பாளர் ஜிதின் மீது புகார்.
திரைப்பட இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது இதில் அருண் விஜய் மற்றும் ரோஷினி ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது இதில் கேரளாவை சேர்ந்த துணை நடிகர்கள் நடித்து வருகின்றனர். ஜிதின் என்பவர் திரைப்படத்திற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து துணை நடிகர் நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைத்து வருகிறார் இந்நிலையில் கேரளாவில் இருந்து லிண்டா உள்ளிட்ட ஒன்பது பேரை அழைத்து வந்து சம்பள அடிப்படையில் நடிக்க வைத்து வருகிறார் மூன்று நாட்கள் படபிடிப்பு முடிந்த நிலையில் துணை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு சம்பளமாக 22 ஆயிரத்து 600 ரூபாய் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது இதனை லிண்டா ஜிதின் என்பவரிடம் கேட்டதாக தெரிகிறது .
இதில் ஆத்திரம் அடைந்த ஜிதின் பிரிண்டாவை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது இதனால் காயமடைந்த லிண்டா கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளார் மேலும் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார் இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூரியா நடித்து கன்னியாகுமரியில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் பாலாவுக்கும் சூரியாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இடையில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.பாலா மீண்டும் மீண்டும் கன்னியாகுமரியில் மீண்டும் “வணங்கான்” திரைப்படத்தின் படபிடிப்புநடைபெற்று வருகிறது..முன்பு சூரியா நடித்து படப்பிடிப்பு நடத்திய இடங்களில் மீண்டும் படபிடிப்பு நடக்கும் நிலையில் தான் பிரச்சனை உருவாகி உள்ளது. புகாரை அடுத்து.காவல்துறையினர் இரண்டு பிரிவினரிடமும் சமாதானமாக போங்கள்.வழக்கு பதிவு செய்து வீணான பிரச்சினை களை சந்திக்காதீர்கள் என சமரசம் செய்து பணம் கிடைக்க வேண்டியவர்களின் பணமும் கிடைக்க செய்தனர்.இயக்குநர் பாலாவின் கவனத்திற்கே செல்லாமல் இந்த பிரச்சினை தீர்ந்து வைக்கப்பட்டதற்கு.இறைவனுக்கு நன்றி என நம்மை சந்தித்த படக்குழுவின் பணியாளர்கள் தெரிவித்தனர்.