• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சரியான தருணத்துக்காக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்-ஜி.கே.வாசன் பேட்டி

ByKalamegam Viswanathan

Mar 19, 2023

பாராளுமன்றத் தேர்தலில் தவறாக செயல்பட்டவர்களுக்கு சரியான பதிலடி வாக்காளர்கள் கொடுப்பார்கள்.-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி.
மதுரை, திருமங்கலத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் வந்தடைந்தார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்
பழங்குடியின மக்களுக்கு பழங்குடியின பட்டியலில் வெளியிட்டதற்கு தமிழக அரசை த ம க வரவேற்கிறது.பழங்குடியினருக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழ் இட ஒதுக்கீடு, வீடு கட்ட இடம் அனைத்தையுமே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் அவர்களுக்கு விரைவில் வழங்கிட அரசாணை வெளியிட வேண்டும்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் கொலை கொள்ளை போதைப் பொருட்கள் என அனைத்தும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
எனவே இதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.ஆன்லைன் சூதாட்டத்தை முதலிருந்து தமிழ மாநில காங்கிரஸ் கண்டித்து வருகிறது.ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடியாக சட்ட திருத்தத்தை கொண்டு வந்து இதை முற்றிலுமாக தடுத்து ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்க கூடியநிலையில் வரும் தேர்தல் பாதிப்பு இருக்குமா குறித்த கேள்விக்கு பாஜகபெரும்பாலான மாவட்டங்களில் வலுவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணியும் வலுவாக செயல்பட தொடங்கி இருக்கிறது.இந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் நலன் காக்க வேண்டும் என்பது தமிழ் மாநில காங்கிரஸ் விரும்புகிறது.வட மாநிலத்தவர்கள் சர்ச்சை மீது நடவடிக்கை திமுக அரசு எவ்வாறு எடுத்து இருக்கிறது என்று குறித்த கேள்விக்கு த.ம.க வட மாநிலத் தவரை பாதுகாக்கும்.தமிழகத்தில் வட மாநிலத்தவரின் பங்கு மிகவும் அதிகமாக இருக்கிறது அதில் மாற்றுக்கருத்தே கிடையாது.வட மாநிலத்த்வர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வட மாநில தொழிலதிபர்கள் இங்கு வந்து பணியாற்றிக் கொண்டு நமக்கு வாய்ப்புகள் கொடுத்துக் கொண்டிருக்கும் போது வட மாநிலத்தவர்கள் இங்கு வந்து வேலை பார்ப்பது எந்த தப்பும் கிடையாது.மும்பை மற்றும் டெல்லியிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் கர்நாடகத்தை சேர்ந்தவர்களும் வேலை பார்க்கிறார்கள். எனவே நாம் எல்லோரும் இந்தியன் என்ற ஒற்றுமை உணர்வோடு இருந்தால் அந்தந்த மாநில அரசுக்கு நல்லது அதையே த.ம.க வலியுறுத்துகிறது.
போன ஆட்சியில் திமுக அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் இந்த ஆட்சியில் திமுக அமைச்சர்கள் மீது இருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள குறித்த கேள்விக்கு
கால் புணர்ச்சி அரசியலை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சரியான தருணத்தை சரியான நேரத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தலில் தவறாக செயல்பட்டவர்களுக்கு சரியான பதிலடி வாக்காளர்கள் கொடுப்பார்கள் என G.K வாசன் கூறினார்.