• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த மேஜர் ஜெயந்தின் உடல் மதுரை விமான நிலையம் வருகிறது

ByKalamegam Viswanathan

Mar 17, 2023

அருணாசலபிரதேசம் மாண்டல பகுதியில் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த மேஜர் ஜெயந்தின் உடல் தலைநகர் திசாப்பூரில் அஞ்சலி செலுத்தப்பட்டு விமானப்படை விமானம் மூலம் இரவு 8 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறது. மதுரை விமானநிலையத்தில் அரசுமரியாதைக்கு பின் மேஜர் ஜெயந்த் உடல் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்களம் கொண்டு செல்லப்படுகிறது.அருணாசலபிரதேசம் மாண்டல பகுதியில் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த லெப்ட்டினன்ட் கர்னல் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்தின் உடல் தலைநகர் திசாப்பூரில் அஞ்சலி செலுத்தப்பட்டு விமானப்படை விமானம் மூலம் அவர்களது சொந்த ஊரான (லெட்டினன்ட் கர்னல் ரெட்டி உடல் ஐதராபாத் கொண்டுசெல்லப்ப்பட்டு அங்கிருந்து தெலுகானவில் உள்ள ஏடாட்ரி பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது.இதேபோல் மேஜர் ஜெயந்தின் உடல் அதே விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்படுகிறது மதுரையில் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இறுகி அஞ்சலிக்கு பின் பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படுகிறது
மதுரை விமான நிலையத்தில் மேஜர் ஜெயந்தின் உடலுக்டு மதுரை மாவட்ட ஆட்சியர். அணிஷ் சேகர் | மதுரை விமான நிலைய இயக்குனர் கணேசன் மத்திய தொழிற் பாதுகாப்பு படை துணை கமாண்டர் விஸ்வநாதன் மற்றும் காவல் துறையினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.அஸாமில் உள்ள விமானப்படை பயிற்ச்சி முகாமில் ஹெலிகாப்டர் பயிற்ச்சியில் ஈடுட்ட.மேஜர் ஜெயந்த் ரெட்டி ஆகியோர் விபத்தில் பலியாகினர்.அவர்களது உடல் அஞ்சலி செலுத்தப்பட்டு டெல்லி விமானப்படை தலைமையகம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் வீரர் ரெட்டியின் உடல் டெல்லியிலிருந்து சொந்த ஊரான ஆந்திராவிற்கும், மேஜர் ஜெயந்தின் உடல் விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டு அங்கிருந்த பெரியகுளம் அருகில் உள்ள ஜெயமங்கலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.