தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் மு. காஜா முகைதீன் தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளதாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து நேற்று (15.03.2023) மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
நடப்பு நிதியாண்டில் டாப்செட்கோ கழகம் மூலம் தனிநபர் கடன், கறவை மாட்டு கடன், ஆழ்துளைக் கிணறு அமைக்க கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட குறியீடுகளை எய்துவது குறித்து டாப்செட்கோ தலைவர் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார். ஆய்வுக் கூட்டத்தில் டாப்செட்கோ தலைவர் அவர்கள் 8 பயனாளிகளுக்கு ரூ.43,832/- மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செ.சங்கரநாராயணன், மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ரா.இலட்சுமணக்குமார் மற்றும் துணைப்பதிவாளர் மு.கார்த்திக் கௌதம், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் மற்றும் திட்ட மேலாளர் எஸ்.இராமச்சந்திரன், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் என்.வானதி மற்றும் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து.., ஆட்சித்தலைவர் ஆய்வு..!








