• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

விருகம்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டிய நபர் கைது

Byஜெ.துரை

Mar 15, 2023

விருகம்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிக்கட்டிகள் மற்றும் பணத்தை திருடிய நபர் கைது.
37 சவரன் தங்க நகைகள்,42 கிலோ வெள்ளிக் கட்டிகள், ரொக்கம் ரூ.62,000/-,1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.கூடுதல் ஆணையர் அன்பு இவ் வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை பிடித்த காவல் அதிகாரிகளை பாராட்டினர்.

சென்னை, வடபழனி, குமரன் காலனி, என்ற முகவரியில் தனியார் போட்டோ லேப் உரிமையாளர் சந்தோஷ்குமார், என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளியூர்சென்று விட்டு கடந்த 28.02.2023 அன்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, யாரோ அடையாளம் தெரியாத நபர் வீட்டின் பூட்டை உடைத்த சுமார் 33 சவரன் தங்க நகைகள், 57 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கம் ரூ.2,25,000/-திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து சந்தோஷ்குமார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மூன்று காவல் உதவி ஆணையர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். விசாரணையில் கொள்ளை அடித்த நபர் பழைய குற்றவாளியான அயபக்கம் பகுதியைச் சேர்ந்த முத்து என தெரிய வந்தது.

மேலும் சந்தோஷ்குமார் வீட்டில் தங்க நகைகள், வெள்ளிக்கட்டிகள்,மற்றும் ரொக்கப்பணத்தை திருடியுள்ளதும் தெரியவந்தது.அதன்பேரில் மேற்படி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அவரிடமிருந்து சுமார் 37 சவரன் தங்க நகைகள், 42கிலோ வெள்ளி கட்டிகள், ரொக்கம் ரூ.62,000/-,1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட முத்து ஏற்கனவே 3 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட முத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்,ஒட்டுமொத்தமாக 51,20,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பத்திரமாக வைத்துள்ளோம்.
10:02:2023 அன்று நடந்த பெரும்புர் கொள்ளை வழக்கில் கஜேந்திரன் மற்றும் திவாகர் ஆகிய இரு குற்றவாளிகளை கைது செய்து கொள்ளும் பின்பு பெங்களூரில் உள்ள போலீஸ் உதவியுடன் கங்காதரன் மற்றும் ஸ்டீபன் என்கின்ற ரித்தீஷ் ஆகிய இரு முக்கிய குற்றவாளிகளையும் கைது செய்தோம், இந்த வழக்கில் 8 புள்ளி ஒரு கிலோ தங்க நகைகள் காணாமல் போயிருக்கின்றது இது குறித்து போலீஸ் காவலில் இருந்து விசாரித்து வருகிறோம், இதில் ஏற்கனவே இரண்டு புள்ளி மூன்று கிலோ தங்கத்தை பெங்களூரு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் மேற்கொண்டு ரெண்டு புள்ளி ஒன்னு கிலோ தங்கத்தை இப்பொழுது நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம், மீண்டும் மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்ய நீதிமன்றத்தில் காவல் விசாரணைக்கு எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டுள்ளோம், மேலும் இந்த வழக்கில் இரண்டு குற்றவாளிகள் தலைமறைவாக்கி உள்ளார்கள் அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து தேடி வருகிறோம்என காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு (IPS) கூறினார்.