• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் ஜோதிடர்களின் மாநில மாநாடு

ஜோதிடர்களின் மாநில மாநாடு சேலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது 2000க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் பங்கேற்றனர்…
உலகத் தமிழ் ஜோதிட மகாசன சபை சார்பாக 11 வது மாநில மாநாடு சேலம் திருவாக் கவுண்டனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. உலகத் தமிழ் ஜோதிட மகாசன சபையின் தலைவர் ஆதித்ய குருஜி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

மேலும் இந்த மாநில மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன குறிப்பாக ஜோதிடர்களுக்கு தனியாக நல வாரியம் அமைத்து தர வேண்டும் நலிந்த ஜோதிடர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மேலும் இதுகுறித்து பிரபல ஜோதிடர் ஷெல்வி கூறுகையில் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் ஜோதிடர்களின் ஒற்றுமைக்காகவும், அனுபவம் குறைந்த ஜோதிடர்களுக்கு ஜோதிடத்தினுடைய சூட்சுமங்களை கற்றுக் கொடுக்கும் வகையிலும் பிரபல ஜோதிடர்கள் கற்றுக்கொண்ட ஆய்வறிக்கைகள் கலந்துரையாடல் நிகழ்வு இந்த மாநாட்டின் மூலமாக அனைவருக்கும் கிடைத்துள்ளது. மேலும் நலிந்த ஜோதிடர்கள் 25 நபர்களுக்கு ரூ.10000 விதம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதுமேலும் உலகத்தில் உள்ள சுமார் 2000 ஜோதிடர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர் அதிலும் குறிப்பாக மேற்கு மண்டலத்திலிருந்து அதிகளவிலான ஜோதிடர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது ஒரு சிறப்புக்குரியது எனக் கூறினார்.