• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மதுரையில் உயர்ரக பைக்கில் வேகமாக வந்த இளைஞர் பலி

ByKalamegam Viswanathan

Feb 26, 2023

மதுரையில் உயர்ரக அதி வேக பைக்கில் வந்த இளைஞர் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.


மதுரை பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் சாலையில் பெரியார் பேருந்து நிலையம் நோக்கி உயர்ரக இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக வந்த திருமங்கலத்தை சேர்ந்த அருண் பிரசாத் என்கிற இளைஞர் தனியார் மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென முன்னேறசென்ற டாட்டா ஏஸ் வாகனத்தில் அதனை தொடர்ந்து அவரது பின்னால் வந்த டெம்போ ட்ராவல் மற்றும் இருசக்கர வாகனம் அடுத்தடுத்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இருவர் படுகாயத்துடன் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதி பட்டுள்ளனர்.சம்பவம் குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்தபகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.