• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மனைவியை கொன்ற கணவனை கைது செய்யகோரி மறியல்

ByKalamegam Viswanathan

Feb 17, 2023

மதுரை வாடிப்பட்டி அருகே மனைவியை கொன்ற கணவனை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கட்டக்குளத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி (30) இவரது கணவர் ராஜேஷ் கண்ணன் (40). இவர்களுக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு மகள்கள் உள்ளனர்.பூங்கொடி மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார் . அவரது கணவர்.ராஜேஷ் கண்ணன் வேலை எதுவும் செய்யாமல் ஊதாரியாக சுற்றித்திரிந்தார். மேலும்மது கஞ்சாஉள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை பயன்படுத்திக்கொண்டு மனைவியுடன் தினமும் சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். கணவரின் தொந்தரவு தாங்காதால்.கடந்த ஒரு வாரம் முன்பாக பூங்கொடி கோபித்துக் கொண்டு அதே ஊரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று பின்பு அங்கிருந்தபடியே அவர் வேலைக்கு சென்று வந்துள்ளார் இதற்காக தினமும் அருகில் உள்ள தாலுகா அலுவலக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அங்கிருந்து மதுரைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.இதனால் மனைவியை பிரிந்த கணவர் ராஜேஷ் கண்ணா தினந்தோறும் பஸ் நிறுத்தத்திற்கு சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பேருந்து நிறுத்தத்திற்கு சென்ற ராஜேஷ் கண்ணா பேருந்துக்காக காத்திருந்த மனைவிபூங்கொடியை கத்தியால் சாரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் நிலைகுலைந்த பூங்கொடி அருகில் உள்ள வாகனம் மூலம் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டு மதுரை அரசு மருத்துவமனை சென்றவர். சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதுகுறித்து பூங்கொடியின் உறவினர்கள் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஒரு வார காலம் ஆகியும் காவல்துறை இதுவரை குற்றவாளியை கைது செய்யாததை கண்டித்து இன்று மாலை மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை கட்டக்குளம் பிரிவு அருகில் சாலை மறியலில் ஈடுபடச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் ஒரு வாரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து விடுவதாக மறியல் செய்ய முயன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அதனை ஏற்றுக் கொண்டு கலைந்து சென்றனர்.இது குறித்து பூங்கொடியின் உறவினர்கள் கூறும் போது விரைவில் குற்றவாளி கைது செய்யப்படாவிட்டால் உறவினர்களை ஒன்று திரட்டி மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றனர்.